இறுதிகட்டத்தில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’

இறுதிகட்டத்தில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’

செய்திகள் 10-Mar-2016 2:11 PM IST VRC கருத்துக்கள்

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டதை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று இரவு வெளியானது! ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இப்படத்தை உலம் முழுவதும் வேந்தர் மூவீஸ் வெளியிடவிருக்கிறது. இப்படத்தில் ராகவா லாரஸுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க, முக்கிய கேரக்டரில் சத்யராஜ நடிக்கிறார். இவர்களுடன் அஸ்வத் தோஸ் ராணா, கோவை சரளா, மதன் பாப், தம்பி ராமையா, சதீஷ், ‘கும்கி’ அஸ்வின், சுகன்யா, தேவதர்ஷினி, பாண்டு, மயில்சாமி என பலர் நடிக்கிறார்கள். தெலுங்கு ‘பட்டாஸ்’ படத்தின் ரீ-மேக்கான இப்படத்தை சாய் ரமணி இயக்கி வருகிறார். அம்ரீஷ் இசை அமைக்கிறார். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பிரம்மாண்ட செட் அமைத்து அதில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இந்த காட்சிகளுடன் வெளிநாடுகளில் இரண்டு பாடல் காட்சிகளையும் படமாக்கி விட்டால் படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று தெரிவித்துள்ளார்கள் படக்குழுவினர். பிரம்மாண்ட படமாக உருவாகி வரும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 87ஆவது தயாரிப்பாகும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு சட்டை ஒரு பல்பம்


;