விஷால், மிஷ்கின் இணையும் படத்தின் பெயர்?

விஷால், மிஷ்கின் இணையும் படத்தின் பெயர்?

செய்திகள் 10-Mar-2016 12:52 PM IST VRC கருத்துக்கள்

முத்தையா இயக்கத்தில் ‘மருது’ படத்தில் நடித்து முடித்த விஷால், அடுத்து மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். விஷால் சொந்தமாக தயாரித்து நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு ‘துப்பறிவாளன்’ என்று பெயர் சூட்டியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிஷ்கின் இயக்கி வரும் ‘சவரக்கத்தி’யின் வேலைகள் முடிந்ததும் துவங்கவிருக்கிறது. இப்படத்தில் விஷாலுடன் யார் யாரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள், தொழில்நுட்ப கலைஞர்களாக யார் யாரெல்லாம் பணியாற்றவிருக்கிறார்கள் என்பது போன்ற விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை. அது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;