துவங்கியது விஜய் சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’

துவங்கியது விஜய் சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’

செய்திகள் 10-Mar-2016 12:44 PM IST VRC கருத்துக்கள்

‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் விரைவில் ரிலீசாகவிருக்கிற படம் ‘குற்றமே தண்டனை’. விதார்த் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி நடிப்பில் ‘ஆண்டவன் கட்டளை’ என்ற படத்தை இயக்குகிறார் மணிகண்டன். இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ‘இறுதிச்சுற்று’ கதாநாயகி ரித்திகா சிங் நடிக்கிறார். ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் அன்புச் செழியன் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று காலை நடந்தது. இந்த பூஜையில் தயாரிப்பாளர் அன்பு செழியன், இயக்குனர் மணிகண்டன், விஜய்சேதுபதி, ரித்திகா சிங் முதலானோர் கலந்துகொண்டனர். பூஜையை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரியாத புதிர் - டிரைலர்


;