‘தெறி’யை தொடர்ந்து அட்லியின் அடுத்த படம்!

‘தெறி’யை தொடர்ந்து அட்லியின் அடுத்த படம்!

செய்திகள் 10-Mar-2016 12:06 PM IST VRC கருத்துக்கள்

‘தெறி’ படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிசியாக இருக்கும் அட்லி ‘ A for Appl’e என்ற பெயரில் சொந்த பட நிறுவனம் என்றை துவங்கியுள்ளார். பட தயாரிப்பிலும் கால் பதிக்கவிருக்கும் அட்லி, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘சங்கிலி பங்கிலி கதவ தொற’ என்று டைட்டில் வைத்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா’ படத்தில் வரும் வசனம் ‘சங்கிலி பங்கிலி கதவ தொற’. இந்த படத்தை கமல்ஹாசன், ப்ரியதர்சன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த ஐ.கே.ஈ இயக்குகிறார். ஜீவா, ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மாயா’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்,. இப்படத்தில் ஜீவா ஸ்ரீதிவ்யாவுடன் ராதா ரவி, ரதிகா முதலானோரும் நடிக்க இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கிலி புங்கிலி கதவ தொற - டிரைலர்


;