முதல்கட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனியின் ‘யமன்’

முதல்கட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனியின் ‘யமன்’

செய்திகள் 10-Mar-2016 11:49 AM IST VRC கருத்துக்கள்

விஜய் ஆண்டனி தயாரித்து, நடித்து சென்ற 4-ஆம் தேதி வெளியான ‘பிச்சைக்காரன்’ பெரும் வெற்றிப் படமாக அமைந்திருப்பதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த மகிழ்ச்சியுடன் தனது அடுத்த படமான ‘யமன்’ படத்திற்கான பூஜையுடன் கூடிய படப்பிடிப்பை இன்று துவங்கி விட்டார் விஜய் ஆண்டனி. ‘லைக்கா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை விஜய் ஆண்டனி நடிப்பில் ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்குகிறர். விஜய் ஆண்டனியே இசை அமைக்கிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. விஜய் ஆண்டனி நடிக்கும் மற்றொரு படமான ‘சைத்தான்’ பட வேலைகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் மே அல்லது ஜூன் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;