சிம்பு பார்த்த ‘ராஜதந்திரம்-2’

சிம்பு பார்த்த ‘ராஜதந்திரம்-2’

செய்திகள் 9-Mar-2016 11:05 AM IST VRC கருத்துக்கள்

கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘ராஜதந்திரம். ஏ.ஜி.அமித் இயக்கிய இப்படத்தில் வீரா, ரெஜினா கெஸண்ட்ரா ஜோடியாக நடித்திருந்தார்கள். இந்த படத்தை செந்தில் வீராசாமி தயாரித்திருந்தார். இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் முதல் பாகத்தை இயக்கிய அமித் இரண்டாம் பாகத்தை இயக்கவில்லை என்றும் முதல் பாகத்தை தயாரித்த செந்தில் வீராசாமி இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது! முதல் பாகத்தில் நடித்த நடிகர்களுடன் மேலும் பல முன்னணி நடிகர்கள் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார்களாம்! இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்கவிருக்கிறது. அதற்கு முன்னதாக ‘ராஜதந்திரம்-2’ படத்தின் புரொமோஷனுக்காக உருவாக்கப்பட்டுள்ள 6 நிமிட காட்சிகளை இம்மாதம் 13ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த 6 நிமிட காட்சிகளை நடிகர் வீரா, சிம்புவுக்கு காண்பித்துள்ளார். அந்த காட்சிகளை பார்த்த சிம்பு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி தான் ‘ராஜதந்திரம்’ படம் வெளியானது. முதல் பாகம் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு இரண்டாம் பாகத்தின் காட்சிகளை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;