மீண்டும் இணையும் ‘மிருதன்’ டீம்!

மீண்டும் இணையும் ‘மிருதன்’ டீம்!

செய்திகள் 8-Mar-2016 3:50 PM IST VRC கருத்துக்கள்

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடித்த ‘மிருதன்’ வெற்றிப் படமாக அமைந்திருப்பதால், சக்தி சௌந்தர் ராஜன் அடுத்து இயக்கும் படத்திலும் ‘ஜெயம்’ ரவியே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இது சம்பந்தமான அதிகாரபூர்வ தகவலை இருவரும் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை ‘திருடன் போலீஸ்’ விரைவில் ரிலீசாகவிருக்கும் ‘ஒரு நாள் கூத்து’ உட்பட பல படங்களை தயாரித்திருக்கும் ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ செல்வகுமார் தயாரிக்கவிருக்கிறார். ‘ஜெயம்’ ரவி தற்போது ‘ரோயியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லக்‌ஷமன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தவிர கௌதம் மேனன் இயக்கும் ஒரு படத்திலும் ‘ஜெயம்’ ரவி நடிக்கவிருக்கிறார். சக்தி சௌந்தர ராஜனும், ஜெயம் ரவியும் மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;