கிரிக்கெட்டில் நுழைந்த குட்டி பத்மினி!

கிரிக்கெட்டில் நுழைந்த குட்டி பத்மினி!

செய்திகள் 8-Mar-2016 11:56 AM IST VRC கருத்துக்கள்

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாகி, தயாரிப்பாளராகி, தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வருபவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வரும் குட்டி பத்மினி விளையாட்டு துறையிலும் ஈடுபட்டுள்ளார். கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து அவர்களின் கனவை நனவாக்கிட அவர்களுக்கு ‘கிரீடா’ விளையாட்டு பயிற்சியை துவக்கியுள்ளார். இதன் துவக்க விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான முரளி விஜய், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால், வேந்தர் ஐசரி கணேஷ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், நடிகருமான ரித்தீஷ், நடிகர்கள் விக்னேஷ், ‘பூச்சி’ முருகன், மனோபாலா, நடிகைகள் சோனியா, லலிதா குமாரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;