வாரிசுகளுக்காக கெஸ்ட் ரோலில் கமல்!

வாரிசுகளுக்காக கெஸ்ட் ரோலில் கமல்!

செய்திகள் 8-Mar-2016 11:12 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தயாரித்து வரும் படம் ‘மீன் குழம்பும் மண் பாணையும்’. பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் ‘ஒரு பக்க கதை’ படத்தில் நடித்து வரும் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தான் இப்படத்திலும் கதாநாயகன்! பிரபுவும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கும் இப்படத்தில் காளிதாஸுக்கு ஜோடியாக அஷ்னா சவேரி நடிக்கிறார். அறிமுக இயக்குனர் அமுதேஷ்வர் இயக்கி வரும் இப்படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் நடந்தது. இப்படத்தில் கமல்ஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிவாஜி குடும்பத்தின் மீது பெரும் மதிப்பு வைத்திருப்பவர் கமல்ஹாசன் என்பதோடு, ஏற்கெனவே சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரித்த படங்களிலும் நடித்துள்ளார் கமல்! அதனால் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே சில படங்களில் பிரபுவுடன் இணைந்து நடித்திருக்கும் கமல்ஹாசன் ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இப்படத்தில் பிரபுவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தை தயாரிக்கும் துஷ்யந்த் ‘சக்சஸ்’, ‘மச்சி’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ


;