குழந்தை தொழிலாளர்கள் பற்றிய படம்!

குழந்தை தொழிலாளர்கள் பற்றிய படம்!

செய்திகள் 7-Mar-2016 12:06 PM IST VRC கருத்துக்கள்

‘கிருத்திகா ஃபிலிம் கிரியேஷன்’ சார்பில் ஏ.எஸ்.முத்தமிழ் கதை எழுதி தயாரிக்கும் படம் ‘அர்த்தநாரி’. இப்படத்தில் புதுமுகம் ராம்குமார், அருந்ததி ஜோடியாக நடிக்க, இயக்குனர் பாலாவிடம் உதவியாளராக பணியாற்றிய சுந்தர இளங்கோவன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். வி.செல்வகணேஷ் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பாரி வேந்தர் பாடல்களை வெளியிட , மைக்ரோசாஃப்ட் நிறுவன முன்னாள் தலைவர் ரங்கபாஷ்யம் மற்றும் நடிகர் சங்க தலைவர் நாசர், பழம்பெரும் தயாரிப்பாளர் கோவைத் தம்பி ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.

விழாவில் படத்தின் கதாநாயகன் ராம்குமார் பேசும்போது, ‘‘அருந்ததி சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். அடுத்த விஜயசாந்தியாக அவர் வருவார்” என்றார்.

கோவைத் தம்பி பேசும்போது, “ஒரு காலத்தில் சினிமா தயாரிப்பாளர்கள், அப்புறம் நடிக நடிகையர்கள், அப்புறம் இயக்குனர்கள் கையில் இருந்தது. இப்போது அது திரையரங்கு உரிமையாளர்கள் கையில் இருக்கிறது. அது கூட தப்பில்லை! ஆனால் அந்தத் திரையாங்கு உரிமையாளர்கள் அரசியல்வாதிகளின் கையில் இருக்கிறார்கள். இது மாறும்வரை தமிழ் சினிமா நல்ல நிலைக்கு வராது” என்றார்.

நாசர் பேசும்போது, ‘ ‘இங்கே திரையிடப்பட்ட பாடல்களால் இந்தப் படம் என்னவோ காதல் படம் போல இருந்தாலும், இந்தப் படத்துக்குள் குழந்தைத் தொழிலாளர்களின் அவலம் பற்றிய ஒரு ஸ்ட்ராங்கான கதை உண்டு. அது இந்தப் படத்துக்கு உதவும்’’ என்றார்.

விரைவில் ரிலீசாகவிருக்கும் ‘அர்த்தநாரி’ படத்தின் ஒளிப்பதிவை ஸ்ரீரஞ்சனா ராவ் கவனிக்க, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு கிடாயின் கருணை மனு - டிரைலர்


;