‘தெறி’க்காக பிரம்மாண்ட விழா?

‘தெறி’க்காக பிரம்மாண்ட விழா?

செய்திகள் 7-Mar-2016 11:31 AM IST VRC கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தெறி’ படத்தின் இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் இருக்கிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ள இப்படத்தின் பாடல்களை இம்மாதம் 20 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். ‘கலைப்புலி’ எஸ். தாணு தயாரிக்கும் படம் என்றாலே அவர் எல்லா விஷயங்களிலும் பிரம்மாண்டத்தை கடை பிடிப்பார். அது மாதிரி ‘தெறி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளார் தாணு! நமக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் படி ‘தெறி’ ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 20 ஆம் தேதி, புதிதாக கட்டப்பட்டுள்ள கலைவாணர் அரங்கத்தில் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கலைப்புலி எஸ்.தாணுவின் பிரம்மாண்ட தயாரிப்பில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘தெறி’யில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் 50ஆவது படம் இது என்பதால் இப்படத்தின் பாடல்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;