கலாபவன் மணி திடீர் மரணம்!

கலாபவன் மணி திடீர் மரணம்!

செய்திகள் 7-Mar-2016 10:39 AM IST VRC கருத்துக்கள்

ஜெமினி, வாஞ்சிநாதன், சம்திங் சம்திங், எந்திரன், பாபநாசம் உட்பட பல தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளவர் கலபாவன் மணி. கேரளாவிலுள்ள சாலக்குடி எனும் ஊரை சேர்ந்த இவர் நேற்று திடீரென்று காலமானார். கலாபவன் மணிக்கு நுரையீரல் சமந்தப்பட்ட நோய் இருந்து வந்தது. அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து அவரை கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் திடீரென்று உயிர் இழந்தார்.

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கலாபவன் மணி! சிறந்த மிமிக்ரி கலைஞராக திகழ்ந்து வந்த இவர், நாட்டுப்புற பாடல்களை பாடுவதிலும் வல்லவராக இருந்தார். இவர் குரலில் ஏராளமான கிராமீய பாடல்கள் வெளியாகியுள்ளது. மலையாலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கலாபவன் மணி. தமிழில் வெளியாகிய ‘காசி’ படத்தின் ஒரிஜினலான ‘வாசந்தியும் பின்னே நானும்’ என்ற மலையாள படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக மத்திய அரசின் ‘ஸ்பெஷ்ல் ஜூரி’ விருது பெற்ற கலாபவன் மணிக்கு கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருது, ஃபிலிம் ஃபேர் விருது உட்பட பல விருதுகள் கிடைத்துள்ளன. கதாநாயகனாக, வில்லனாக, குணசித்திர நடிகராக, காமெடியனாக நடித்து வந்த கலாபவன் மணியின் மறைவு தென்னிந்திய திரையுலகிற்கு பேரிழப்பாகும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜெமினி கணேசனும்சுருளி ராஜனும் - டிரைலர்


;