‘தெறி’க்காக குரல் கொடுத்த டி.ஆர்.!

‘தெறி’க்காக குரல் கொடுத்த டி.ஆர்.!

செய்திகள் 4-Mar-2016 11:22 AM IST Top 10 கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தெறி’ படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்து தற்போது, டப்பிங் போன்ற போஸ்ட் புரொடக்‌ஷன் வேலகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆக்‌ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளதாக குறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கும் 50 ஆவது படம் இது என்பதால் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஹிட்டாக்க வேண்டும் என்பதில் அதிக அக்கரை எடுத்து இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார் ஜி.வி. சமீபத்தில் இப்படத்திற்காக டி.ராஜேந்தர் குரலில் அமர்க்களமான ஒரு குத்துப் பாடலை பதிவு செய்திருக்கும் தகவலை இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளார். அத்துடன் இப்படத்தில் நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் நைனிகா (நடிகை மீனாவின் மகள்) சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் வேலைகளையும் முடிந்துவிட்டதாக அட்லி தெரிவித்திருக்கிறார். வி.கிரியேஷன்ஸ் சார்பில் ‘கலைப்புலி’ எஸ். தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தீல் வெளியாகி பெரும் சாதனை படைத்திருக்கும் நிலையில் இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;