‘மருது’ குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

‘மருது’ குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

செய்திகள் 4-Mar-2016 11:03 AM IST VRC கருத்துக்கள்

‘கொம்பன்’ படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கும் படம் ‘மருது. விஷாலும், ஸ்ரீதிவ்யாவும் ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ராஜபாளையத்தில் நடந்து வந்தது. திட்டமிட்டபடி ‘மருது’வின் அனைத்து படப்பிடிப்புகளும் நேற்றுடன் முடிவடைந்தது. இதனை ‘மருது’ குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் அன்புச் செழியன் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிரார். முத்தையா இயக்கிய ‘கொம்பன்’ படத்தை போல இப்படமும் கிராமத்துப் பின்னணியில் உருவாகி இருக்கிறது. முக்கியமான ஒரு கேரக்டரில் ராதாரவியும் நடித்திருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை வேல்ராஜ் கவனித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;