காட்ஸ் ஆஃப் எகிப்து - விமர்சனம்

காட்ஸ் ஆஃப் எகிப்து - விமர்சனம்

விமர்சனம் 3-Mar-2016 11:02 AM IST Top 10 கருத்துக்கள்

ஐ ரோபோட் (2004), நோயிங் (2009) படங்களை இயக்கிய அலெக்ஸ் பிரோயஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ‘காட்ஸ் ஆஃப் எகிப்து’. மகாபாரதம், ராமாயணம் போன்ற இந்திய புராணக்கதைகளை இங்கே படமாக எடுப்பதுபோல், ஹாலிவுட்டிலும் அவர்கள் சம்பந்தப்பட்ட புராணக்கதைகளை படமாக எடுப்பது வழக்கம். அந்த வரிசையில் எகிப்திய புராணக்கதையை மையமாகக் கொண்டு இந்த ‘காட்ஸ் ஆஃப் எகிப்து’ படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.

மனிதர்களோடு மனிதர்களாக கடவுள்களும் வாழ்ந்த காலகட்டத்தில் இப்படத்தின் கதை நகர்கிறது. ஒசிரிஸ் எனும் எகிப்திய மன்னன் தன்னுடைய ஆட்சி முடிவதை ஒட்டி, தனக்குப் பிறகு தன் மகன் ஹோரஸ் ஆளவேண்டுமென்பதால் அவனுக்கு முடிசூட்டு விழா ஏற்பாடு செய்கிறார். விழாவின் உச்சகட்ட நேரத்தில் உள்ளே புகும் தீயசக்தி கடவுளான செத், ஒசிரஸை கொலை செய்துவிட்டு, ஹோரஸின் கண்களையும் பிடுங்கிவிட்டு தனக்குத்தானே முடிசூட்டுக் கொள்கிறார். அதன்பிறகு எகிப்தில் கொடுங்கோல் ஆட்சி தலைதூக்குகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் திருடுவதில் வல்லவனான பெக் எனும் மனித இனத்தைச் சேர்ந்தவன், தன் காதலி ஜாயாவுடன் சேர்ந்து ஹோரஸின் கண்களை மீட்டெடுத்து, மீண்டும் அவரை ஆட்சி பீடத்தில் அமர வைக்க நினைக்கிறார்கள். ஆனால், துரதிஷ்டவசமாக இந்தப் பயணத்தில் ஜாயா இறந்துவிடுகிறார்.

ஹோரஸின் ஒற்றைக் கண்ணை மீட்டு, அவரிடம் கொடுக்கும் பெக், தன் காதலியை மீண்டும் உயிர்ப்பிக்கக் கோருகிறான். தன் இன்னொரு கண்ணையும் மீட்டெக்கும் பயணத்தில் பெக்கையும் சேர்த்துக் கொள்ளும் கடவுள் ஹோரஸ், ஜாயாவை உயிர்ப்பித்தாரா? மீண்டும் எகிப்திய ஆட்சியை கைப்பற்றினாரா என்பதே ‘காட்ஸ் ஆஃப் எகிப்து’ படத்தின் கதைக்களம்.

மனிதர்களையும், கடவுள்களையும் வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக கடவுளர்களை சுமார் 10 அடி உயரத்திற்கு மாற்றியிருக்கிறார்கள். அதோடு ஆக்ரோஷமாக சண்டையிடும்போது கொடூரமான விலங்குகளாகவும் கடவுள்கள் மாறுகிறார்கள். கற்பனைக்கும் எட்டாத வகையில் இருக்கும் ஒரு சுவாரஸ்யமான கதையை கையிலெடுத்திருந்தாலும், அதற்கேற்ற திரைக்கதையை உருவாக்குவதில் சற்று சறுக்கியிருக்கிறார்கள். பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகள், நம்ப முடியாத கிராபிக்ஸ் வேலைகள், மயிர்கூச்செறியும் சாகஸங்கள் ஆகியவற்றின் மூலம் சறுக்கிய திரைக்கதையை சரி செய்ய முயன்றிருக்கிறார்கள். அதோடு 3டி படம் என்பதால் சிற்சில காட்சிகளில் நம்மையும் மீறி, திரைக்குள் சென்றுவரும் உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் நாயகனாக, ஹோரஸ் எனும் காற்றுக் கடவுளாக நடித்திருப்பவர் நிக்கோலஜ் கோஸ்டர். 300 படத்தில் நடித்த ஜெரார்ட் பட்லர், இப்படத்தில் தீயசக்தி கடவுளாக வந்து ரசிகர்களை மிரட்டியிருக்கிறார். அவரது வில்லத்தனம் நமக்குச் சரியாகக் கடத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் கடவுள்களின் ஞானத்தின் கடவுளாக சாட்விக் போஸ்மன், பெண் கடவுளாக எலோடி யங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

I Robot, Knowing ஆகிய இரு படங்களிலும் Alex உடன் பணியாற்றிய இசையமைப்பாளர், Marco Betrami தான் இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார். Peter Menzies Junior ஒளிப்பதிவை கையாள, Richard Learoyd படத்தை தொகுத்துள்ளார். $140 million அமெரிக்க டாலர்கள் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தின் ரன்னிங் டைம் 127 நிமிடங்கள். Viacom 18 நிறுவனம் இப்படத்தை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;