ஆர்யா படத்திற்கு ரஜினி பட டைட்டில் இல்லை!

ஆர்யா படத்திற்கு ரஜினி பட டைட்டில் இல்லை!

செய்திகள் 3-Mar-2016 10:18 AM IST VRC கருத்துக்கள்

‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வருகிற 10ஆம் தேதி திண்டுக்கல் அருகே உள்ள தாண்டிக்குடி என்ற கிராமத்தில் துவங்கவிருக்கிறது. இதற்காக 100 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளதாக இப்படத்தை தயாரிக்கும் ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்கு ரஜினிகாந்த் நடித்த பட டைட்டிலான ‘தனிக்காட்டு ராஜா’ என்ற டைட்டில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் இப்படத்திற்கு ‘தனிக்காட்டு ராஜா’ என்ற டைட்டிலை வைக்கவில்லை, என்ற தகவலையும் தயாரிப்பு தரப்பினர் தெரிவித்துள்ளார்கள். இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடிக்க, இது ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் 88-ஆவது படமாகும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;