Speed பட வரிசையில் ரசிகர்களை மிரட்ட வரும் Bus 657

Speed பட வரிசையில் ரசிகர்களை மிரட்ட வரும் Bus 657

செய்திகள் 3-Mar-2016 10:05 AM IST Chandru கருத்துக்கள்

பிரயாணிகளை ஏற்றி செல்கின்ற Bus ஐ ஓட்டும் ட்ரைவர் பணயக்கைதியாக வைக்கப்பட்டு, Bus hijack செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்பதை, Speed மற்றும் Speed -2 படங்களில் கண்டுள்ளோம். அதே போல், ஒரு மனிதன், குறிப்பிட ஒரு காரணத்திற்காக ஒரு Bus -ஐ hijack செய்ய நேரிட்டால், என்ன மாதிரியான விளைவுகள் உருவாகும் என்பதுதான், Bus 657 படத்தின் சாரம்.

மிக சிறந்த Classic மற்றும் Action படங்களில் நடித்துள்ள Robert De Niro இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். The Tournament என்கிற ஒரு மகத்தான action படத்தை அளித்த Scott Mann, இப்படத்தை இயக்கி உள்ளார். Stephen Cyrus Sepher மற்றும் Max Adams இதற்கு திரைக்கதை அமைத்துள்ளனர்.

மனைவியை இழந்த ஒரு சூழலில், தனது ஒரே மகளான Sidney Silva (Kate Bosworth) ஐ வளர்த்திட அரும்பாடு படுகிறார், The Hope Silva (Robert De Niro). நோய்வாய் ப்ட்டுவிட்ட தனது மகளின் சிகிச்சைக்காக அதிக பணம் தேவை படுகிறது, Silva விற்கு!
வேறு வழி தெரியாமல், ஒரு பெரிய சூதாட்ட விடுதியை சூரையாடி, பணம் திருட திட்டம் போடுகிறார், Silva. எதிர்பாராத விதமாக, திட்டம் திசை திரும்ப, Bus ஒன்றை Hijack செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது, Silva விற்கு! இதை அடுத்து நிகழும் விளைவுகள் தான் படத்தின் உச்சம்.

இப்படத்தில் Jeffrey Dean Morgan, Morris Chestnut மற்றும் Tyson Wilson ஆகிய நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். Brandon Cox ஒளிப்பதிவு செய்துள்ளார். Robert Dalva படத்தை தொகுத்துள்ளார். Impossible Films இப்படத்தை உருவாக்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சன்னி லியோனின் ‘பேபி டால்...’ பாடல்


;