சந்தானத்துக்கு ஜோடியாகும் மராத்தி நடிகை!

சந்தானத்துக்கு ஜோடியாகும் மராத்தி நடிகை!

செய்திகள் 3-Mar-2016 9:51 AM IST VRC கருத்துக்கள்

விரைவில் ரிலீசாகவிருக்கும் ‘ஒரு நாள் கூத்து’, மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ‘ப்ரூஸ்லீ’ ஆகிய படங்களை தயாரிக்கும் ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம் ‘சர்வர் சுந்தரம்’. சந்தானம் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிபு சமீபத்தில் துவங்கியது. அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கும் இப்படத்தில் சந்தானத்துக்கு யார் ஜோடியாக நடிக்கிறார் என்பது முடிவாகாமல் இருந்தது. இப்போது ‘சரவர் சுந்தரத்தி’ற்கு யார் ஜோடியாகிறார் என்பது முடிவாகியுள்ளது. மராத்தி தியேட்டர் மூலம் கலையுலகில் அறிமுகமான வைபவி ஷண்டிலியா, ‘சர்வர் சுந்தர’த்தில் சந்தானத்துக்கு ஜோடியாகிறார். இவர் பரதம், கதக் ஆகிய நடனங்களில் தேர்ச்சி பெற்றவர். ‘சர்வர் சுந்தரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் வைபவியை வரவேற்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;