‘போக்கிரி ராஜா’ ரிலீசுக்கு கிரீன் சிக்னல்!

‘போக்கிரி ராஜா’ ரிலீசுக்கு கிரீன் சிக்னல்!

செய்திகள் 2-Mar-2016 1:21 PM IST VRC கருத்துக்கள்

ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா முதலானோர் நடிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள படம் ‘போக்கிரி ராஜா’. பி.டி.எஸ்.ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பி.டி.செல்வகுமார் தயரித்துள்ள இப்படம் நாளை மறுநாள் (4-ஆம் தேதி) வெளியாக உள்ளது. இப்படத்தை தயாரித்திருக்கும் பி.டி.செல்வகுமார், விஜய் நடித்த ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதால் ‘புலி’ படம் மூலம் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்த்து வைத்தால் தான் ‘போக்கிரி ராஜா’ படத்தை வெளியிட அனுமதிப்போம் என்று விநியோகஸ்தர் தரப்பிலிருந்து நெருக்கடி கொடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தினரும், விநியோகஸ்தர் சங்கத்தினருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தது. அந்த பேச்சு வார்த்தையில் நேற்று சுமுகமான முடிவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ‘போக்கிரி ராஜா’ திரைப்படம் திட்டமிட்டபடி 4-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ஜீவாவின் 25-ஆவது படமான ‘போக்கிரி ராஜா’ காதல், காமெடி, ஃபேன்டசி கலந்த ஜனரஞ்சக படம் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;