4-ஆம் தேதி வெளியாகும் விஜய்சேதுபதி பட டிரைலர்!

4-ஆம் தேதி வெளியாகும் விஜய்சேதுபதி பட டிரைலர்!

செய்திகள் 2-Mar-2016 11:18 AM IST VRC கருத்துக்கள்

ஸ்டுடியோ கிரீன், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், அபி அன்ட் அபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காதலும் கடந்து போகும்’ ‘சூதுகவ்வும்’ வெற்றி படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி, ‘பிரேமம்’ பட புகழ் மடோனா செபாஸ்டின் ஜோடியாக நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வருகிற வெள்ளிக் கிழமை (4-ஆம் தேதி) வெளியாகவிருக்கிறது. முக்கிய கேரக்டரில் சமுத்திரகனியும் நடித்துள்ள இப்படத்தை வருகிற 11-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ‘சூதுகவ்வும்’ படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமியும், விஜய்சேதுபதியும் இணைந்துள்ள ‘காதலும் கடந்து போகும்’ படம் மீது பெரும் எதிர்பர்ப்பு நிலவி வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;