ஜி.வி., தினேஷ் படங்களை வாங்கிய ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்!

ஜி.வி., தினேஷ் படங்களை வாங்கிய ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்!

செய்திகள் 2-Mar-2016 10:26 AM IST VRC கருத்துக்கள்

‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் செல்வகுமார் தயாரித்துள்ள படம் ‘ஒரு நாள் கூத்து’. அறிமுக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இப்படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெதுராஜ், கருணாகரன், ரித்விகா, பாலசரவணன், ரமேஷ் திலக், ராமதாஸ் முதலானோர் நடித்துள்ளனர். ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ஆரஞ்சு மிட்டாய்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ள இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் கைபற்றியிருப்பதோடு இதே நிறுவனம் தயாரித்து வரும் இன்னொரு படமான ‘ப்ரூஸ்லீ’யையும் இதே நிறுவனமே வெளியிடவிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ், க்ருத்தி கார்பண்டா ஜோடியாக நடிக்கும் ‘ப்ரூஸ்லீ’யை பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். அனைத்து வேலைகளும் முடிந்து, சென்சாரில் ‘யு ’சர்டிஃபிக்கெட்டும் வாங்கியிருக்கும் ‘ஒரு நாள் கூத்து’ படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;