இசைக்கும், விளையாட்டுக்கும் ஒரு தொடர்பு இருந்து வருகிறது. இதற்கு நிறைய உதாரணங்களை சொல்லலாம்! அந்த வரிசையில் சென்னையில் நடைபெறவிருக்கும் கால் பந்து போட்டிக்காக ‘கோல் போடு’ என்று துவங்கும் ஒரு வீடியோ பாடலை பதிவு செய்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் ஏ.எச்.காஸிப். ‘ஐபிஎல்’ கிரிக்கெட் போட்டி போல நடைபெறவிருக்கும் கால் பந்து போட்டிக்காக காஸிப் இசை அமைத்துள்ள இப்பாடலை பிரபல ஹிந்தி பாடகரும் இசை அமைப்பாளருமான விஷால் தட்லானி பாடியுள்ளார், இந்த பாடலை மோகன் ராஜ் இயற்றியிருக்கிறார். லண்டன் பிபிசி நடத்தும் அஷாந்தி ஒம்காரின் ஷோவில் இந்த வாரத்துக்கானா பாடலாக ‘கோல் போடு’ பாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ பாடலை அஷ்வின் ரவீந்திரன் இயக்கியுள்ளார்.
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்புசமீபத்தில் தாய்லாந்த் -...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து சென்ற வருட தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் ‘பிகில்’....