மகேந்திரன் உதவியாளர் இயக்கும் படம்!

மகேந்திரன் உதவியாளர் இயக்கும் படம்!

செய்திகள் 1-Mar-2016 11:25 AM IST VRC கருத்துக்கள்

‘மரம் மூவீஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘பகடி ஆட்டம்’. இப்படத்தில் ரகுமான் சைபர் க்ரைம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கதையின் நாயகியாக கௌரி நந்தா நடிக்கிறார், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ராம்கே சந்திரன் ‘பகடி’ ஆட்டம் குறித்து பேசும்போது,

‘‘நான் மகேந்திரன், லேனா மூவேந்தர், செல்வராஜ் ஆகிய இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளேன். அனைத்து வசதிகளும் உள்ள ஒருவனுக்கும், அன்றாட வாழ்க்கைக்காக போராடும் பெண் ஒருவருக்கும் இடையே நடக்கும் போராட்டமே இப்படத்தின் கதைக்களம். நவீன உலகில் பொருளாதாரம் மற்றும் டெக்னாலஜி எப்படி ஒருவனது வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது என்பது கதையின் முக்கிய அம்சம். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் சென்னையிலேயே நடைபெற்றுள்ளது. இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார். கிருஷ்ணசாமி ஒளிப்ப்திவு செய்துள்ளார்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;