நடிகர் குமரிமுத்துவின் திடீர் மறைவையொட்டி நடிகர் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:
‘‘தன்னுடைய நடிப்பாலும், வித்தியாசமான சிரிப்பாலும் நம்மோடு பயணித்த அண்ணன் குமரிமுத்து அவர்கள் இன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.. அதற்காக மனம் வருந்துகிறோம். அவரை இழந்து வாடும் அவருடைய உற்றார்க்கும், சுற்றத்தார்க்கும் எங்கள் ஆறுதலை சமர்ப்பிக்கிறோம் ...
இந்த நேரத்தில் அவர் சங்கத்திற்கு ஆற்றிய அரும் பணிகளையும், சங்க நலத்திற்காக குரல் கொடுத்து போராடியதையும், நியமன செயற்குழு உறுப்பினராக எங்களோடு செயல்பட்டு முன்னேற்றத்திற்கான பல்வேறு யோசனைகளை சமீபகாலம் வரையிலும் வழங்கியதை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.
நிறைவு செய்ய முடியாத ஒருவெற்றிடத்தை விட்டு சென்றிருக்கும் அவர் சங்கத்திற்காக கண்ட கனவுகளை நனவாக்குவது ஒன்றே அவர் ஆத்மாவுக்கு செலுத்துகின்ற மலர் வளையமாகும்!
இப்படிக்கு,
அவர் பிரிவால் வருந்தியும் , நினைவால் நெகிழ்ந்து வாடும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் , செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் அங்கத்தினர்கள்
தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நாஞ்சில் நளினி நேற்று சென்னையில் காலமானார்....
ஜீவா சங்கர் இயக்கிய ‘அமரகாவியம்’, ‘எமன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆல்பர்ட் ராஜா....
அறிமுக இயக்குனர் ஸ்ரீசெந்தில் இயக்கத்தில் பரத், ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் ஆகியோர் நடித்து சமீபத்தில்...