சனம் ஷெட்டியின் ‘சவாரி’ அனுபவம்!

சனம் ஷெட்டியின் ‘சவாரி’ அனுபவம்!

செய்திகள் 29-Feb-2016 3:15 PM IST VRC கருத்துக்கள்

‘என்டர்டெயின்மென்ட் பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படம் ‘சவாரி’. அறிமுக இயக்குனர் குகன் சென்னியப்பன் இயக்கியுள்ள இப்படத்தில் பெனிட்டோ ஃபிராங்க்ளின், சனம் ஷெட்டி ஜோடியாக நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ள இப்படம், அடுத்த மாதம் வெளிவரவிருக்கிறது. இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சனம் ஷெட்டி கூறும்போது,

‘‘சவாரி’ எனக்கு மிக முக்கியமான படம்! வித்தியாசமான ஸ்டைலில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோ பெனிட்டோவின் காதலியாக நடித்துள்ளேன். கதையில் பல திருப்பங்கள் உண்டு! படத்தில் இடம் பெறும் ஒரு டூயட் பாடலுக்காக நான் கடலில் கட்டுமரத்தில் பயணிக்க வேண்டி இருந்தது. இதற்கு முன்பு நான் கட்டு மரத்தை பார்த்தது கூட இல்லை . அன்று தான் என் முதல் கட்டுமர பயணம்! கடலில் நடந்த அந்த படப்பிடிப்பில் ரொம்பவும் பயந்து கொண்டு நடித்தேன். படக்குழுவினர் தந்த தைரியத்தில் நடித்தேன். கடலுக்குள் போய் நடித்ததை நினைக்கும்போது இப்போதும் பயமாக இருக்கிறது.

‘சவாரி’ படத்தின் டீஸரை ஆர்யா வெளியிட்டார். படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இதெல்லாம் ‘சவாரி’ படத்திற்கு கிடைத்த பெருமை தான். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யானை மேல் குதிரை சவாரி - டிரைலர்


;