விக்ரம் பிரபுவுடன் இணையும் ஐஸ்வர்யா தத்தா!

விக்ரம் பிரபுவுடன் இணையும் ஐஸ்வர்யா தத்தா!

செய்திகள் 29-Feb-2016 2:58 PM IST VRC கருத்துக்கள்

‘பாணா காத்தாடி’ படத்தை தொடர்ந்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. ‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.அர்.பிரபாகரன் இயக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க ஏற்கெனவே மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இப்படத்தில் இன்னொரு ஹீரோயின் கேரக்டரும் உண்டு என்றும் அதற்கு ஐஸ்வர்யா தத்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா தத்தா சமீபத்தில் வெளியான அருள்நிதியின் ‘ஆறாது சினம்’ படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொம்புவச்ச சிங்கம்டா டீஸர்


;