மிஷ்கினுடன் இணையும் விஷால்!

மிஷ்கினுடன் இணையும் விஷால்!

செய்திகள் 29-Feb-2016 12:50 PM IST VRC கருத்துக்கள்

தற்போது தனது ‘LONEWOLF PRODUCTIONS’ நிறுவனம் சார்பில் ‘சவரக்கத்தி’ படத்தை தயாரித்து, அதில் வில்லனாக நடித்து வரும் மிஷ்கின் இந்த படம் முடிந்ததும் விஷால் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். விஷால் தற்போது முத்தையா இயக்கத்தில் ‘மருது’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த படத்தை தொடர்ந்து விஷால், லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக்கோழி-2’வில் நடிக்கவிருந்தார். ஆனால் ‘சண்டக்கோழி-2’வை கைவிடுவதாக விஷால் சமீபத்தில் அறிவித்தார். ‘சண்டக்கோழி-2’வை கைவிடப்பட்டதாலும், ‘மருது’வின் ஷூட்டிங் முடிந்து விட்டதாலும் விஷால் தற்போது மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். மிஷ்கின் தயாரிப்பில் ஜி.ஆர்.சத்யா இயக்கும் ‘சவரக்கத்தி’யின் வேலைகளும் இறுதிகட்டத்தை எடியுள்ளதாக கூறப்படுகிறது. மிஷ்கினும், விஷாலும் முதன் முதலாக இணையும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கத்திச்சண்டை - நான் கொஞ்சம் பாடல் வீடியோ


;