சூடு பிடித்தது ‘2.0’வின் படப்பிடிப்பு!

சூடு பிடித்தது ‘2.0’வின் படப்பிடிப்பு!

செய்திகள் 29-Feb-2016 12:15 PM IST VRC கருத்துக்கள்

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ரஜினியின் ‘காபாலி’ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி, ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரனி’ன் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 20 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் இப்போது ‘2.0’வின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த செட்டில் 500-க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் கலந்துகொள்ள, சில காமெடி காட்சிகளை படமாக்கி வரும் ஷங்கர், அடுத்து ரஜினி, அக்‌ஷய் குமார் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் படமாக்க உள்ளார். இதற்காக நேற்று முன் தினம் சென்னைக்கு வந்துள்ளார் அக்‌ஷய் குமார். ‘கபாலி’யின் முழு படப்பிடிப்பும் முந்துவிட்டு ரஜினி இப்படத்தில் தொடர்ந்து நடிக்க துவங்கியிருப்பதால் சூடு பிடித்துள்ளது ‘2.0’வின் படப்பிடிப்பு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;