நடிகர் குமரிமுத்து காலமானார்!

நடிகர் குமரிமுத்து காலமானார்!

செய்திகள் 29-Feb-2016 11:24 AM IST VRC கருத்துக்கள்

கோழி கூவுது, ஊமை விழிகள், அறுவடை நாள், புது வசந்தம் உட்பட ஏராளமான தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தவர் குமரிமுத்து. 78 வயதான குமரித்து கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் சென்னை மைலாப்பூரிலுள்ள காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்! இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி குமரிமுத்து காலமானார்.

தனது முத்திரை சிரிப்பால் மிகவும் பிரபலமான குமரிமுத்து கலைமாமணி உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார். நடிகர் சங்கத்திலும் பதவி வகித்துள்ளார். மேலும் திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு மேடைப் பேச்சாளராகவும் இருந்து வந்தவர். குமரிமுத்து என்றதும் அனைவருக்கும் அவரது வித்தியாசமான அந்த சிரிப்பு தான் நினைவுக்கு வரும். மறைந்த குமரிமுத்துவின் மனைவி பெயர் புண்ணியவதி. இவர்களுக்கு செல்வபுஷ்பா, எலிசபெத் மேரி, கவிதா என 3 மகள்களும், ஐசக் மாதவராஜன் என்ற மகனும் உள்ளார்.
மறைந்த குமரிமுத்துவின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். திடீரென்று காலமான குமரிமுத்துவின் இழப்பு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;