‘தோழா’ ஆடியோ விழா ஹைலைட்ஸ்!

‘தோழா’ ஆடியோ விழா ஹைலைட்ஸ்!

செய்திகள் 27-Feb-2016 11:30 AM IST VRC கருத்துக்கள்

கார்த்தி, நாகார்ஜுனா இணைந்து நடித்துள்ள ‘தோழா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னியிலுள்ள St. Bede's Anglo Indian Higher Secondary School வளாகத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில் கார்த்தி, நாகார்ஜுனா ஆகியோருடன் படத்தின் இயகுனர் வம்சி, கதாநாயகி தமன்னா, இசை அமைப்பாளர் கோபி சுந்தர், ‘பிவிபி நிறுவனத்தைச் சேர்ந்த ராஜீவ் காமினேனி மற்றும், நடிகர்கள் சிவகுமார், சூர்யா, தயாரிப்பாளர் சங்க தலைவர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு, செயலாளர் டி.சிவா, இயக்குனர்கள் சந்தானபாரதி, சுதா, மனோபாலா, பொன்வண்ணன், தயரிப்பாளர்கள் கே.ஈ.ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரபு உட்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஜான் பிரிட்டோ குழுவினரின் நடன நிகழ்ச்சியுடன் துவங்கிய விழா கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் நடைபெற்றது.

விழாவில் நடிகர் சிவகுமார் பேசும்போது, ‘‘பல ஆண்டுகளுக்கு முன் ‘தேவதாஸ்’ என்று ஒரு படம் வந்தது. அதில் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் கதாநாயகனாக நடித்திருந்தார். பெரும் சாதனை படைத்த படம் அது. அது மாதிரி ‘தோஸ்த்’ என்று ஒரு ஹிந்தி படமும் வெளிவந்து பெரும் சாதனை படைத்தது. அந்த ‘தேவதாஸ்’ படத்தில் நடித்த நாகேஸ்வர ராவின் மகன் தான் நாகார்ஜுனா. நாகார்ஜுனாவும், கார்த்தியும் இணைந்து நடித்துள்ள இந்த ‘தோழா’, ‘தேவதாஸ்’, ‘தோஸ்த்’ ஆகிய படங்களை போன்று பெரும் வெற்றிப் படமாக அமையும்’’ என்று வாழ்த்தினார்.

‘தோழா’வின் கதாநாயகன் கார்த்தி பேசும்போது, ‘‘நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது! நட்புக்கு பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் கிடையாது. நட்பு என்பது எதையும் எதிர்பார்த்து வருவதும் கிடையாது. வாழ்க்கையில் ஒரு நல்ல நண்பன் இருந்தால் போதும்! அந்த வாழ்கை இனிக்கும். நான் காலேஜில் படித்து முடித்துவிட்டு நண்பர்களை பிரிந்து வரும்போது அழுதிருக்கிறேன். அந்த அளவுக்கு ஒவ்வொரு வாழ்க்கையிலும் நட்பு மிக முக்கியமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. ‘தோழா’ அது மாதிரி ஃப்ரெண்ட்ஷிப்பை பற்றிய படம் தான். ‘தளபதி’ படத்தில் ரஜினி சாரும், மம்முட்டி சாரும் நட்புக்கு இலக்கணமாக திகழ்வார்கள்! அது மாதிரி இந்த ‘தோழா’வும் நட்புக்கு இலக்கணமான ஒரு படமாக அமையும்.

இப்படத்தை ‘பிவிபி சின்மாஸ்’ நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. மூன்று வெளிநாடுகளில் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது. வம்சி சார் இயக்கத்தில் நாகார்ஜுனா சாருடன் இப்படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம்! இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்’’ என்றார்.

இவ்விழாவில் கலந்துகொண்ட மேலும் பலர் ‘தோழா’ படக் குழுவினரை வாழ்த்திப் பேசினார்கள். விழாவில் இடம் பெற்ற நடிகைகள் பூர்ணா, சுஜா முதலானோரின் நடன நிகழ்ச்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;