‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாராதான் இன்றைய தேதியில் நம்பர் ஒன் தென்னிந்திய நாயகி. அவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்று வருவதால், அவரைத்தேடி ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இருந்தபோதிலும், தனக்கான ஸ்கோப்புள்ள கேரக்டர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நயன். அப்படி அவர் சமீபத்தில் ஆர்வமாக ஒப்புக்கொண்ட படத்தை தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்கும், இயக்குனர் சற்குணமும் இணைந்து தயாரிக்கிறார்கள். சற்குணத்தின் அசோஷியேட் முருகதாஸ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். தினேஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, விவேக் மெர்லின் இசையமைக்கிறார். எடிட்டிங் பணிகளை கோபி கிருஷ்ணா
கவனிக்கிறார்.
நேற்றுமுதல் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ள இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஹரீஷ் உத்தமன், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, மன்சூர் அலிகான் ஆகியோரும் நடிக்கிறார்கள். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் நிறைந்த இப்படத்தில் ஒரு காரும், நாயும் முக்கிய பங்களிப்பை வழங்கியிருக்கிறதாம்.
கடந்த வருடம் வெளியாகி சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற ஹாரர் படமான ‘மாயா’வில் நயன்தாராதான் நாயகி என்பதால், தற்போது உருவாகி வரும் இந்த பெயரிடப்படாத ஹாரர் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து சென்ற வருட தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் ‘பிகில்’....