விஜய் ஆன்டனியை அழ வைத்த பிச்சைக்காரன்!

விஜய் ஆன்டனியை அழ வைத்த பிச்சைக்காரன்!

செய்திகள் 26-Feb-2016 11:59 AM IST VRC கருத்துக்கள்

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் வருகிற 4-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இதனையொட்டி நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சசி பேசும்போது,

‘‘இது பிச்சைக்காரர்களை பற்றிய படம் அல்ல. சூழநிலை காரணமாக பிச்சைக்காரன் ஆகும் ஒரு பணக்காரனைப் பற்றிய கதை தான்! இந்த கதைக்கு ‘பிச்சைக்காரன்’ என்பதை விட பொருத்தமான டைட்டிலே இல்லை. இந்த டைட்டிலை வைக்க முதலில் ரொம்பவும் யோசித்தோம். ஆனால் விஜய் ஆண்டனி இந்த டைட்டிலில் ரொம்பவும் உறுதியாக இருந்தார். அதனால் இந்த டைட்டிலை வைத்தோம்’’ என்றார்.

இயக்குனர் சசியை தொடர்ந்து விஜய் ஆண்டனி பேசும்போது, ‘ டிஷ்யூம்’ படத்தில் என்னை ஒரு இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் சசி சார்தான்! அவருடன் ஒரு படம் பண்ணனும்னு எனது ஆசையை தெரிவித்தேன். அப்போது அவர் சொன்ன கதை இந்த ‘பிச்சைக்காரன்’. இந்த கதை கேட்டு முடித்ததும் நான் அடக்க முடியாமல் குமுறி குமுறி அழுதேன். அந்த வகையில் என்னை மிகவும் பாதித்த கதை இது. நான் இதுவரை எந்த கதையை கேட்டும் அழுததில்லை. இந்த கதையை தயாரித்து, நடித்ததில் பெருமைப்படுகிறேன். இந்தப் படத்துக்காக பல இடங்களில் நிஜமாகவே பிச்சை எடுத்தேன் . என்னை பிச்சைக்காரர்கள் மத்தியில் உட்கார வைத்து விட்டு தூரதத்தில் இருந்து கேமரா மூலம் படம் பிடித்தார்கள். சில சமயம் நிஜ பிச்சைக்காரர்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு பணம் கொடுத்து நடிக்க வைத்தோம். அப்போது அவர்களின் கதைகளை எல்லாம் கேட்டோம். யாரும் பிறக்கும்போது பிச்சைகாரனாக பிறப்பதில்லை. சந்தர்பசூழ்நிலைகள் தான் எல்லாவற்றுக்கும் காரணம். பிச்சைக்காரர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது, குடும்பம் இருக்கிறது. குடும்பத்தினரை வாழவைப்பதற்காக தான் பெரும்பாலான பிச்சைக்காரர்களும் பிச்சை எடுக்கிறார்கள். சசி சார் இயக்கத்தில் வெளிவரும் இந்த படம் வித்தியாசமான ஒரு படமாக இருக்கும்’’ என்றார்.

விஜய் ஆண்டனியின் ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை தமிழகம் முழுக்க SKYLARK ENTERTAINMENT உடன் இணைந்து K.R.FILMS வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;