சூர்யா வெளியிடும் டிரைலர்!

சூர்யா வெளியிடும் டிரைலர்!

செய்திகள் 26-Feb-2016 10:32 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் மணிரத்னத்துடன் ‘அலைபாயுதே’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘கடல்’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவரும், பிரபல கதாசிரியர் ஆர்.செல்வராஜின் மகனுமான தினேஷ் செல்வராஜ் இயக்கும் படம் ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’. இந்த படத்தின் கதையை தினேஷுடன் இணைந்து அவரது தந்தை ஆர்.செல்வராஜ் அமைத்துள்ளார்.

‘ஆபிஸ்’ டி.வி.தொடரில் கதாநாயகனாக நடித்த கார்த்திக்கேயன் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஷரியா, இவன்ஸ்ரீ, ஜெகதீஷ், ஜார்ஜ் விஜய், அரவிந்த், அருள் ஜோதி ஆகியோர் நடித்துள்ளனர். ‘ஆல்ஃபா ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் இப்படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா நாளை (27-2-16) மாலை 6 மணிக்கு தனது டிவிட்டரில் வெளியிடுகிறார். ஏ.டி.பகத்சிங் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நவீன், பியோன் சுரோ இருவர் இசை அமைக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;