400- க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகும் கணிதன்!

400- க்கும் மேற்பட்ட  தியேட்டர்களில் வெளியாகும் கணிதன்!

கட்டுரை 25-Feb-2016 5:09 PM IST VRC கருத்துக்கள்

‘கலைப்புலி’ எஸ்.தாணுவின் ‘வி.கிரியேஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ‘கணிதன்’. ‘ஈட்டி’ வெற்றிப் படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் வெளிவரவிருக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் சிஷ்யர் டி.என்.சந்தோஷ் இயக்கியுள்ளார். ‘டிரம்ஸ்’ சிவமணி இசை அமைத்துள்ளார். அதர்வாவும், கேத்ரின் தெரெசாவும் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படத்தில் அதர்வா நேர்மையான ஒரு சேனல் ரிப்போர்ட்டாராக நடித்துள்ளார். பத்திரிகையாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ‘கலைப்புலி’ எஸ்.தாணுவின் தயாரிப்பு, ‘ஈட்டி’ யை தொடர்ந்து அதர்வா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் என பல சிறப்புக்களுடன் வெளிவரவிருக்கிறது ‘கணிதன்’. நாளை வெளியாகவிருக்கும் இப்படம் உலகம் முழுக்க 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடவிருப்பதாக தயாரிப்பு தரப்பினர் தெரிவித்துள்ளார்கள். ‘கலைப்புலி’ எஸ்.தாணுவின் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘காக்க காக்க’, ‘துப்பாக்கி’ ஆகிய படங்களின் வரிசையில் அதர்வாவின் ‘கணிதனு’ம் இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் இப்படக் குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;