தமிழில் 2வது ரவுண்ட்டுக்குத் தயாரான சந்தீப்!

தமிழில் 2வது ரவுண்ட்டுக்குத் தயாரான சந்தீப்!

செய்திகள் 25-Feb-2016 1:36 PM IST VRC கருத்துக்கள்

‘யாருடா மகேஷ்’ படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் சந்தீப் கிஷன். அப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் பல வாய்ப்புகள் அவரைத் தேடி வரவே, டோலிவுட்டில் பிஸியாக நடித்து வந்தார். இந்நிலையில், ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் 2வது தயாரிப்பான ‘மாநகரம்’ படத்தின் மூலம் தமிழில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சந்தீப் நடித்திருக்கும் இப்படத்தில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஸ்ரீயும் ஹீரோவாக நடித்துள்ளார். நாயகியாக ரெஜினா கெஸன்ட்ரா நடித்திருக்கும் இப்படத்தில் ‘முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ், சார்லி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ‘ஹைப்பர்லிங்க் ஸ்டோரி’யாக உருவாகி வரும் ‘மாநகரம்’ படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜாவேத் இசையமைக்க, ஸ்டன்ட் பணிகளை கவனிக்கிறார் அன்பறிவ்.

‘மாநகரம்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் சூழ்நிலையில், ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் தயாரிப்பில், தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குனராக அவதாரம் எடுக்கும் ‘மாயவன்’ படத்திலும் நாயகனாகியிருக்கிறார் சந்தீப். போலீஸாக இப்படத்தில் நடிக்கும் சந்தீப்பிற்கு ஜோடியாக லாவண்யா திரபாதி நடிக்கிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘யாருடா மகேஷ்’ படத்திற்குப் பிறகு, ‘மாநகரம்’, ‘மாயவன்’ என அடுத்தடுத்த தமிழ்ப் படங்களில் ஹீரோவாகியுள்ளதன் மூலம் தனது 2வது ரவுண்ட்டுக்கத் தயாராகிவிட்டார் சந்தீப் கிஷன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாயவன் - டிரைலர்


;