‘யு’ சர்டிஃபிக்கெட் வாங்கிய ‘நட்பதிகாரம்-79’

‘யு’ சர்டிஃபிக்கெட் வாங்கிய ‘நட்பதிகாரம்-79’

செய்திகள் 25-Feb-2016 12:25 PM IST VRC கருத்துக்கள்

‘கண்ணெதிரே தோன்றினாள்’ படப் புகழ் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் ‘நட்பதிகாரம் -79’. ‘ஜெயம் சினி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் டி.ரவிகுமார் தயாரித்துள்ள இப்படத்தில் ‘ஓ நாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் நடித்திருக்கும் ராஜ்பரத், ‘வல்லினம்’, ‘மாயா’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் அம்ஜத்கான் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, தேஜஸ்வினி, ரேஷ்மி மேனன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ள இப்படத்தை அடுத்த மாதம் ரிலீஸ் செய்யவிருப்பதை முன்னிட்டு இப்படத்தை சென்சார் குழுவினருக்கு திரையிட்டு காட்டியுள்ளார்கள். படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இதனால் ‘நட்பதிகாரம்-79’ படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவை குருதேவ் கவனிக்க, தீபக் நிலம்பூர் இசை அமைத்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் ரவிச்சந்திரன் கூறும்போது, ‘‘கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்த வேளை, உற்சாகம் படங்களை தொடர்ந்து இது நான் இயக்கும் ஐந்தாவது படம். ‘கண்ணெதிரே தோன்றினாள்’ நட்பையும் காதலையும் சொன்ன விதத்தில் அப்படம் பெரிய வெற்றி அடைந்தது. அதே போல் ‘நட்பதிகாரம்-79’ படத்தில் நட்பு, காதல்,குடும்ப உறவுகள் பற்றியும் வேறு ஒரு பரிமாணத்தில் சொல்லி இருக்கிறேன். படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்திருப்பதில் எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சி. இப்படத்தை அடுத்த மாதம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யவிருக்கிறோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கருப்பன் - அழகழகாக பாடல் வீடியோ


;