ஹாலிவுட் பட பாணியில் உருவாகும் நேர்முகம்!

ஹாலிவுட் பட பாணியில் உருவாகும் நேர்முகம்!

செய்திகள் 25-Feb-2016 11:30 AM IST VRC கருத்துக்கள்

‘ஹைடெக் பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘நேர்முகம்’. புதுமுகம் ரஃபி கதாநாயகனாக நடித்து, தயாரிக்கும் இப்படத்தில் மீராநந்தன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், மீனாட்சி உட்பட பலர் நடிக்கிறார்கள். ‘பார்வை ஒன்றே போதுமே’, ‘பேசாத கண்ணும் பேசும்’ முதலான படங்களை இயக்கிய முரளி கிருஷ்ணா பாடல்கள் எழுதி இசை அமைத்து இயக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. பாடல்களை நடிகை நமிதா வெளியிட பாண்டியராஜன் பெற்றுக்கொண்டார்.
‘நேர்முகம்’ படம் குறித்து இயக்குனர் முரளிகிருஷ்ணா கூறும்போது, ‘‘இது ஹாலிவுட் பணியிலான திரைக்கதை அமைப்பை கொண்ட படம்! மனநோய் நிபுணர் ஒருவர் நகரின் ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். அவரிடம் சிகிச்சை பெற தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். அவர்களில் ஹீரோ, ஹீரோயினும் இருக்கிறார்கள். அப்போது அவர்கள் அந்த கிளினிக்கில் நடக்கும் சில விநோத சம்பவங்களை பார்க்கிறார்கள். பிரபலமான அந்த மனநோய் டாக்டரே ஒரு சைக்கோ நோயாளி என்பதை கண்டு பிடிக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் ‘நேர்முகம்’ படத்தின் திரைக்கதை. அதனை அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் விதமான காட்சி அமைப்புகளுடன் இயக்கியிருக்கிறேன்’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிமிர் - நெஞ்சில் மாமழை வீடியோ பாடல்


;