'சண்டக்கோழி 2' விஷால் அதிரடி அறிவிப்பு!

'சண்டக்கோழி 2' விஷால் அதிரடி அறிவிப்பு!

செய்திகள் 25-Feb-2016 11:07 AM IST VRC கருத்துக்கள்

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடித்து பெரும் வெற்றிப் பெற்ற படம் 'சண்டக்கோழி'. 2005-ல் வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘சண்டக்கோழி-2’ என்ற பெயரில் எடுக்க முடிவு செய்திருந்தார்கள் லிங்குசாமியும், விஷாலும்! அதனால் லிங்குசாமி இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் விஷால், ‘‘சண்டக்கோழி’ இரண்டாம் பாகத்தை கைவிடப்படுகிறது’ என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது முத்தையா இயக்கத்தில் ‘மருது’ படத்தில் நடித்து வரும் விஷால் ‘மருது’வின் ஷூட்டிங் முடிந்ததும் ‘சண்டக்கோழி-2’வில் நடிக்க முடிவு செய்து தேதிகள் ஒதுக்கியிருந்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ‘சண்டக்கோழி-2’வை கைவிடப்படுவதாக விஷால் அறிவித்திருப்பது எல்லோரையும் வருத்தப்பட வைத்துள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;