50 நாட்களில் முடித்துவிட்ட அம்மா கணக்கு!

50 நாட்களில் முடித்துவிட்ட அம்மா கணக்கு!

செய்திகள் 25-Feb-2016 10:36 AM IST VRC கருத்துக்கள்

அஸ்வினி ஐயர் இயக்கத்தில் ஹிந்தியில் உருவான படம் ‘நில் பேட்டே சனாடா’. சில திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு திரைப்பட விமர்சகர்களின் பராட்டுக்கள் பெற்ற இப்படத்தை தமிழில் ‘அம்மா கணக்கு’ என்ற பெயரில் தயாரிக்கிறார் தனுஷ். ஹிந்தியில் இயக்கிய அஸ்வினி ஐயரே தமிழிலும் இயக்கும் இப்பட்த்தின் மையக் கரு அம்மா- மகள் இருவருக்கும் இடையே நடைபெறும் பாசப் போராட்டம் தான்! சமுத்திரக்கனி, ரேவதி, அமலா பால் முதலானோர் நடிக்கும் இப்படத்திற்கு இளையராஜ இசை அமைக்கிறார். கடந்த மாதம் (ஜனவரி) தான் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. கிட்டத்தட்ட 50 நாட்களில் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளையும் முடித்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை துவங்கியுள்ளனர் ‘அம்மா கணக்கு’ படக்குழுவினர். விரைவில் இப்படத்தின் டீஸர், பாடல்கள் ஆகியவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பவர் பாண்டி - சூரக்காத்து பாடல் வீடியோ


;