‘போக்கிரி ராஜா’வுக்கு கிடைத்த முதல் வெற்றி!

‘போக்கிரி ராஜா’வுக்கு கிடைத்த முதல் வெற்றி!

செய்திகள் 25-Feb-2016 10:25 AM IST VRC கருத்துக்கள்

ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா முதலானோர் நடிக்கும் ‘போக்கிரி ராஜா’ திரைப்படம் அடுத்த மாதம் (மார்ச்) 4-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கும் இப்படம் நேற்று சென்சார் அதிகாரிகளின் பார்வைக்கு சென்றது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்தில் எந்த ‘கட்’டும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து படத்திற்கு அனைவரும் பார்க்க கூடிய படம் என்று ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். ‘எதிர்பார்த்தது போலவே தங்கள் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் கிடைத்திருப்பது, எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி’ என்கிறார்கள் ‘போக்கிரி ராஜ’ பட குழுவினர்! ரொமான்டிக் காதல், காமெடி படமாக அமைந்துள்ள இப்படத்தை ‘பி.டி.எஸ்.ஃபிலிம் இன்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் பி.டி.செல்வகுமார் தயரித்துள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் வருகிற 4-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது ‘போக்கிரி ராஜா’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;