கார்த்தியின் ‘தோழா’வில் அனிருத்!

கார்த்தியின் ‘தோழா’வில் அனிருத்!

செய்திகள் 24-Feb-2016 1:53 PM IST VRC கருத்துக்கள்

கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா முதலானோர் நடிக்கும் ‘தோழா’ படப் பாடல்கள் நாளை மறுநாள் (26-2-16) வெளியாகவிருக்கிறது. வம்சி இயக்கியுள்ள இப்படத்திற்கு கோபிசுந்தர் இசை அமைத்துள்ளார். ‘பி.வி.பி.சினிமா’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டைட்டில் பாடலை கோபிசுந்தர் இசையில் அனிருத் பாடியுள்ளார். இது குறித்து பி.வி.பி.சினிமா நிறுவனத்தை சேர்ந்த ராஜீவ் காமினேனி கூறும்போது,

‘‘தோழா' வெவ்வேறு வாழ்க்கை முறைகளில் இருந்து வரும் இரு நண்பர்களை பற்றியக் கதை. இவர்களுக்குள் இருக்கும் நட்பை பிரதிபலிப்பது மாதிரியான பாடல் ஒன்றை தலைப்பு பாடலாக பதிவு செய்ய எண்ணினோம். அந்தப் பாடலை இளைஞர்களிடம் பிரபலமான அனிருத் பாடினால் நன்றாக இருக்கும் என்று இயக்குனரும், இசை அமைப்பாளரும் முடிவெடுத்தார்கள். உடனே அனிருத்தை அணுகினோம். அவரும் சற்றும் தயக்கம் இன்றி பாடலை பாட ஒப்புக் கொண்டார். 'தோழா என் உயிர் தோழா…' என்று துவங்கும் இந்தப் பாடல், இனி வரும் காலங்களில் தோழமையை குறிக்கும் பாடலாக அமையும் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறோம். 'தோழா'வின் அனைத்து பாடல்களுக் மிக மிக இனிமையாக அமைந்துள்ளது. படமும் அருமையாக வந்துள்ளது’’ என்றார்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;