சசிகுமார் படத்தை வாங்கிய லைக்கா!

சசிகுமார் படத்தை வாங்கிய லைக்கா!

செய்திகள் 24-Feb-2016 11:14 AM IST Chandru கருத்துக்கள்

‘தாரை தப்பட்டை’ படத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேல் வேறெந்த படங்களிலும் நடிக்காமல் இருந்த இயக்குனர் சசிகுமார், தற்போது வசந்தமணி எனும் அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் ‘வெற்றிவேல்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சமுத்திரக்கனி, தம்பி ராமையா, ரேணுகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு வேலைகளை எஸ்.ஆர்.கதிர் கவனிக்க, டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் ஆகியவை விரைவில் வெளிவரவிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையினை லைக்கா புரடொக்ஷன் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறதாம். தமிழில் படங்களை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், விநியோகம் செய்வதிலும் பெரிய ஆர்வம் காட்டி வருகிறது லைக்கா நிறுவனம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;