மீண்டும் ‘பம்மல் கே சம்பந்தம்’ கூட்டணி!

மீண்டும் ‘பம்மல் கே சம்பந்தம்’ கூட்டணி!

செய்திகள் 24-Feb-2016 10:08 AM IST Chandru கருத்துக்கள்

ஒருபுறம் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து கமல் நடித்து வந்தாலும், இன்னொருபுறம் கமலின் ஆஸ்தான ஏரியாவான காமெடி கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். அந்தவகையில் இயக்குனர் மௌலியுடன் மீண்டும் இணைந்து ஒரு காமெடிப் படத்தில் நடிக்கவிருக்கிறார் உலகநாயகன்.

2002ஆம் ஆண்டு கமல், சிம்ரன், அப்பாஸ், சினேகா ஆகியோர் நடிப்பில், மௌலி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘பம்மல் கே சம்பந்தம்’. இப்படத்தைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் மாதவன் நடித்த ‘நள தமயந்தி’ படத்தையும் இவரே இயக்கினார். நள தமயந்தி படத்திற்குப் பிறகு படங்கள் இயக்குவதை நிறுத்தி வைத்திருந்த மௌலி, தற்போது கமலுக்காக மீண்டும் இயக்குனர் நாற்காலியில் அமர்கிறார். இப்படமும் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்தே உருவாகவிருக்கிறதாம். படத்திற்கு ‘பரமபதம்’ என்ற டைட்டிலை வைக்க பரிசீலனை நடந்து வருகிறதாம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவரலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;