அனைவரும் பார்க்க கூடிய படம் கார்த்தியின் ‘தோழா’

அனைவரும் பார்க்க கூடிய படம் கார்த்தியின் ‘தோழா’

செய்திகள் 23-Feb-2016 11:37 AM IST VRC கருத்துக்கள்

வம்சி, இயக்கத்தில் கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தோழா'. பி.வி.பி.சினிமா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். விநோத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 26-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸ்ருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ‘தோழா’வின் அனைத்துகட்ட பணிகளும் முடிவடைந்த நிலையில் இப்படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினார்கள். இப்படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் ‘தோழா’விற்கு அனைவரும் பார்க்க கூடிய படம் என்ற 'யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். எதிர்பார்த்தது மாதிரியே ‘யு’ சர்டிஃபிக்கெட் கிடைத்திருப்பதால் ‘தோழா’ குழுவினர் மேலும் உற்சாகமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து பிவிபி சினிமா நிறுவனத்தினர் ‘தோழா’வை மார்ச் இறுதியில் வெளியிட திட்டமிட்டு அதற்கான வேலைகளை துரிதமாக செய்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;