எம்.ஜி.ஆரின் பேரன் அறிமுகமாகும் படம்!

எம்.ஜி.ஆரின் பேரன் அறிமுகமாகும் படம்!

செய்திகள் 23-Feb-2016 10:25 AM IST VRC கருத்துக்கள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி பிக்சர்ஸ் மற்றும் ‘ட்ரான்ஸ் லிங்க் மீடியா’ டி.கே.ராஜேந்திரன் இணைந்து தயாரிக்கும் படம் ‘கபாலி தோட்டம்’. இப்படத்தில் கதையின் நாயகர்களாக புதுமுகம் விக்கி மற்றும் எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் இருவரும் நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அனிஷா நடிக்கும் இப்படத்தில் ‘கோலிசோடா’ படத்தில் வில்லனாக நடித்த மது முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். டி.ஆர்.பாஸ்கர் எழுதி இயக்கும் இப்படத்திற்கு யு.கே.முரளி இசையமைக்கிறார். பிரியன் பாடல்களை எழுதுகிறார். படம் குறித்து இயக்குனர் டி.ஆர்.பாஸ்கர் கூறும்போது, “ தீயதைத் தீயிட வருவான்’ என்பதுதான் படத்தின் ஒரு வரி கதை. சென்னையில் நடந்த உண்மைக் கதையை வைத்து எடுக்கவிருக்கிற கமர்ஷியல் படம் இது. மொத்தப் படமும் சென்னையில் படமாக்கப்படுகிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;