‘இரு முகன்’ to ‘கருடா’ : விறுவிறுவென பறக்கிறார் விக்ரம்!

‘இரு முகன்’ to ‘கருடா’ : விறுவிறுவென பறக்கிறார் விக்ரம்!

செய்திகள் 23-Feb-2016 10:05 AM IST Chandru கருத்துக்கள்

‘ஐ’ படத்திற்காக 2 வருடங்களை முழுதாக ஒதுக்கிய விக்ரம், அதற்கு பிறகான தனது படங்களை வேகவேகமாக முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார். விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்த ‘10 எண்றதுக்குள்ள’ படத்தைத் தொடர்ந்து தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘இரு முகன்’ படத்தில் நடித்து வருகிறார். விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து சென்னையில் நீளமான சுரங்க வழிப்பாதை செட்களில் ‘இரு முகன்’ படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

மே மாதத்திற்குள் ‘இரு முகன்’ படப்பிடிப்பு வேலைகளை விறுவிறுவென முடித்துவிட்டு, அதன்பிறகு ‘கருடா’விற்கு பறக்கலாம் என்று திட்டமிட்டுள்ளாராம் விக்ரம். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தைத் தொடர்ந்து ‘கருடா’ படத்தை இயக்குகிறார் திரு. ஜூன் 2வது வாரத்தில் ‘கருடா’வின் படப்பிடிப்பு வேலைகள் துவங்கும் எனத் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதே கண்கள் - டீசர்


;