ஜீ.வி.பிரகாஷ் - ஆர்.ஜே.பாலாஜி : புதிய காமெடிக் கூட்டணி!

ஜீ.வி.பிரகாஷ் - ஆர்.ஜே.பாலாஜி : புதிய காமெடிக் கூட்டணி!

செய்திகள் 23-Feb-2016 9:57 AM IST Chandru கருத்துக்கள்

‘டார்லிங்’ படம் மூலம் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவான ஜீ.வி.பிரகாஷ், தனது அடுத்தடுத்த புராஜெக்ட்களை வித்தியாசமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவான முதல் படமான ‘பென்சில்’ தற்போது ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் அவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘புரூஸ் லீ’ படமும் படப்பிடிப்பு வேலைகள் முடியும் தருவாயில் உள்ளன. ‘டார்லிங்’ இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் மீண்டும் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தில் அவருக்கு ஜோடியாக மீண்டும் ஆனந்தி நடிக்கிறார். இப்படத்தின் வேலைகளும் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன.

மேற்கண்ட படங்களைத் தொடர்ந்து ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்ற படத்திலும் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கிறாராம். இப்படத்தை எம்.ராஜேஷ் இயக்குகிறார். ராஜேஷின் ஆஸ்தான காமெடியன் சந்தானம், தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருப்பதால் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் ஜீ.வி.யுடன் காமெடிக்காக ஆர்.ஜே.பாலாஜி களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. பாண்டிச்சேரி, கோவா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடற்கறை நகரங்களில் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெறுமாம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;