கௌதம் மேனன் உதவியாளர் ஹீரோவாகும் ‘ஜெட்லீ’

கௌதம் மேனன் உதவியாளர் ஹீரோவாகும் ‘ஜெட்லீ’

செய்திகள் 22-Feb-2016 12:27 PM IST VRC கருத்துக்கள்

ஆடு முக்கிய வேடத்தில் நடித்த “ ஆட்டுக்கார அலமேலு’, மாடு நடித்த ‘கோமாதா என் குல மாதா’ யானை நடித்த ‘ நல்ல நேரம்’ பாம்பு நடித்த ‘நீயா’, ‘வெள்ளிக்கிழமை விரதம்’, ஈ முக்கியமாக நடித்த ‘நான் ஈ’, கோழி நடித்த ‘ஆடுகளம்’, நாய் நடித்த ‘நாய்கள் ஜாக்கிரதை’, குதிரை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்ற ‘அழகர் சாமியின் குதிரை’ போன்ற படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. இவைகளை தொடர்ந்து குட்டி வெள்ளை பன்றி முக்கிய கதாபாத்திரம் ஏற்று ‘ஜெட்லீ’ என்ற டைட்டில் ரோலில் நடிக்கிறது. இப்படத்தில் நகைச்சுவை நாயகர்களாக கண்ணன் பொன்னையா, ஜெகன் சாய் இருவரும் நடிக்கிறார்கள். இவர்களில் கண்ணன் பொன்னையா கெளதம் மேனனிடம் உதவியாளராக பணியாற்றியவர். இப்படத்தில் கதாநாயகிகளாக ‘என்னை அறிந்தால்’, ‘உத்தமவில்லன்’ படங்களில் நடித்த பார்வதி நாயர், விஜய் ஆன்டனி நடிக்கும் ‘சைத்தான்’ படத்தில் நடிக்கும் அருந்ததி நாயர் இருவரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கும் ஜெகன்சாய் படம் குறித்து கூறும்போது, ‘‘மக்களுக்கு அறியாமை தலை விரித்தாடுகிறது. அபசகுனம், சுபசகுனம் என்று சகுனங்களின் மேல் அதிக நம்பிக்கை வைத்துத் தான் மக்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதை காசாக்க நினைக்கும் இருவரின் நகைச்சுவை கலாட்டா தான் ‘ஜெட்லீ’. இப்படத்தில் ‘நார்னியா’, ‘லயன்’ போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர் ஒருவர் அனிமேட்டராக பணிபுரிகிறார். மிக உயரிய தொழில்நுட்பத்துடன் இப்படம் உருவாகி வருகிறது. காமெடிதான் படத்தின் உயிர் நாடி. சென்னை, திருநெல்வேலி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ‘என்னை அறிந்தால்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய டேன் மெக்கார்தரிடம் உதவியாளராக இருந்த திலிப் குமார் ஒளிப்பதிவு செய்ய, சத்யா இசை அமைக்கிறர். இப்படத்தை ‘ ஸ்ரீ சிவாஜி சினிமாஸ்’ பட நிறுவனமும், ‘ஒண்டர் லேன்ட் மோஷன் பிக்சர்ஸ்’ பட நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயா 2 - ட்ரைலர்


;