அனிருத் இசை அமைக்கும் ‘ரம்’ துவங்கியது!

அனிருத் இசை அமைக்கும் ‘ரம்’ துவங்கியது!

செய்திகள் 22-Feb-2016 11:55 AM IST VRC கருத்துக்கள்

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்த ரிஷிகேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ரம்’. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. இப்படத்தில் கதாநாயகிகளாக சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கேரக்டர்களில் விவேக், நரேன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

‘ரம்’ குறித்து தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா கூறும்போது, "படத்தில் நாயகனாக நடிக்கும் ரிஷிகேஷ் எனது நண்பர். ‘ரம்’ இதுவரை வராத பாணியிலான கிரைம் ஹாரர் படமாக இருக்கும். வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களை தரவேண்டும் என்பதே எங்கள் லட்சியம். இப்படத்தை தொடர்ந்து மேலும் இரண்டு படங்களை தயாரிக்க இருக்கிறோம். ‘ரம்’ ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும்" என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரம் - டீசர்


;