ஜெய்யின் ‘புகழ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜெய்யின் ‘புகழ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செய்திகள் 22-Feb-2016 11:41 AM IST VRC கருத்துக்கள்

‘வலியவன்’ படத்தை தொடர்ந்து ஜெய் நடிப்பில் வளர்ந்து வந்த ‘புகழ்’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டு ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ‘உதயம் NH-4’ படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். ‘ரேடியன்ஸ் மீடியா’ வருண்மணியனும், சுஷாந்த் பிரசாத்தும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை அடுத்த மாதம் (மார்ச்) 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசை அமைத்திருக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ஜெய்’ நடித்த ‘வலியவன்’ எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் ’புகழ்’ மாபெரும் வெற்றிபெற்று, தனக்கு பெரும் புகழ் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஜெய்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எங்கும் புகழ் வீடியோ பாடல் - பரியேறும் பெருமாள்


;